லக்னோ;
உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளார். இந்த தொகுதியில், ஸ்மிருதி இரானி 4 லட்சத்து 67 ஆயிரத்து 598 வாக்குகள் பெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 4 லட்சத்து 13 ஆயிரத்து 394 வாக்குகளே கிடைத்துள்ளது.